சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களில் நடைபெறும் திருமணங்கள் தொடர்பாக மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் மண்டபங்கள் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories