தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர்.
தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, நாகை, தென்காசி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், அரியலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.