திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடுகுத்தகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாடிய நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கள்ளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாடம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராமஞ்சேரி மதுரை புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.