திரைப்படத் துறையை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு. டைம் லூப் கான்செப்ட்டை மையமாகக்கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மார்க்கம் தற்கொலையை எதிர்க்கும் நிலையில் இஸ்லாமிய இளைஞர் தற்கொலை செய்து கொள்வது போல காட்சிகள் வைத்துள்ளதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜகவினருக்கு அறிவுறுத்தியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “வரலாற்றுரீதியான படங்கள் தவறாக எடுக்கப்பட்டால் சுட்டிக் காட்டுவதில் தவறில்லை. ஆனால் சாதாரணமாக வெளியாகும் பொழுதுபோக்கு படங்களை விமர்சிப்பதும், தடை செய்யக் கோருவதும் தேவையற்றது” என்று தெரிவித்துள்ளார்.