திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். தற்போது உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருப்பதால் முதல்வர் இன்று சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.