Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: தீபாவளி அன்று கட்டுப்பாடு… தமிழகத்தில் திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனால் பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக காற்று மாசு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் கொரோணா பரவும் அபாயம் இருப்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படும். பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |