தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இதன் சென்னையில் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்தினால் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.