துணைவேந்தர்களுடன் அக்.30ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த மாதம் 18ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அக்.30-ம் தேதி அனைத்து துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் உயர்கல்வி, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்கள் பங்கேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு தற்போதுதான் முதன்முதலாக தமிழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.