Categories
பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தூக்கி வாரி போட்ட தங்கம்…. மேலும் மேலும் உயர்கிறது …!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் தங்கத்தை ஆபரண பொருளாக பார்ப்பவர்களை விட முதலீடாக பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த நிலையில் தான் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் வரலாறு காணாத வகையில் 4 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்தது.

இன்றைய நிலவரப்படி ஒரு பவுன்  168 உயர்ந்து 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனையாயாகிறது. அதே போல ஒரு கிராம் 21  ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் 52 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது. தொடர் விலை உயர்வால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Categories

Tech |