Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தூத்துக்குடி எஸ்.பி மாற்றம் – சாத்தான்குளம் சம்பவத்தால் அதிரடி நடவடிக்கை …!!

தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் எஸ்பி ஆக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி எஸ்பி ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கைதாகி நீதிமன்ற காவலில் கோவில்பட்டி சிறையில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கூடுதல் எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க பட்டது. அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு புதிய எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Categories

Tech |