தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 நபர்கள் பலியானார்கள். இது குறித்து ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த ஆணையம் பிப்ரவரி 18 சாட்சிகள் விசாரணையை முடித்துவிட்டது.
மொத்தம் 36 கட்டங்களாக 1,048 நபர்களிடம் ஆணையம் விசாரித்ததாகவும், 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்பிக்க இருப்பதாகவும் ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரன் தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேல் 25ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..