Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மேலும் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை நிரந்தரமாக மூட கோரி போராட்டமானது நடைபெற்றது. 100 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம், நூறாவது நாளின் போது (மே 22ஆம் தேதி) பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்ற நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டதையடுத்து  போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நிறைவடைந்து அறிக்கையையும் தமிழக அரசிடம் அருணா ஜெகதீசன் ஒப்படைத்தார். இந்த அறிக்கை சமீபத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |