தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தென் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட்டது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.