Categories
மாநில செய்திகள்

BREAKING : தென்கொரியர்கள் தப்பிய வழக்கு…. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு….!!!

ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 2 தென் கொரியர்கள் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ளதனியார்  நிறுவனத்தை சேர்ந்த இரண்டு தென் கொரியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக கூறி வீடுகளில் அடைக்கப்பட்டிருந்தனர். வீட்டிலிருந்தபடியே ஆவணங்களை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் பெற்றதாகவும் ,பின்னர் தலைமறைவானதாக கூறி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க செங்கல்பட்டு எஸ்பிக்கும், ஆரம்பகட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கும் நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், ஆர் ஹேமலதா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |