நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் முழு ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெற மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நாளை காலை 6 மணி முதல் தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஊரடங்கு வாபஸ். இரண்டாவது அலையினால் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் தெலுங்கானாவில் முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.