தேனி மாவட்டம் குமுளி அருகே ஏற்பட்ட விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் குமுளி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து தற்போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தபோது 50 அடி ஆழ பள்ளத்தில் திடீரென கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த குழந்தை உட்பட 3 பேர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.