தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, ராணிப்பேட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் புதிதாக புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி,ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கும் சிவகங்கை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். மேலும் திருப்பத்தூரில் எட்டாம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேனீ, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.