Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தேமுதிக தனித்து போட்டி…. பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதையடுத்து அமமுக, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், தேமுதிக தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. தனித்து போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக, நாம் தமிழர், மநீம தனித்து களமிறங்கும் நிலையில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |