தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் செல்லூர் ராஜு, “என் மீது ஊழல் குற்றசாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விளக்க தயார் என்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனது துறையிலும், எந்த இடத்திலும் நான் முறைகேடு ஊழல் செய்ததில்லை. பட்டா வழங்க பணம் பெற்றதாக என் மீது தவறான குற்றச்சாட்டை கூறுகின்றனர். அதை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விளக்க தயார் என தெரிவித்துள்ளார்.