தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதனை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் எட்டாவது மற்றும் கடைசி கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர்.
இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏப்ரல் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஐந்து ஆண்டுகால ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் இன்று மாலையுடன் தேர்தல் நடத்தை விதி முடிவுக்கு வரவுள்ளது. அதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.