Categories
தேசிய செய்திகள்

BREAKING : தேர்தல் சீர்திருத்த மசோதா…. மாநிலங்களவையில் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டது….!!!!

தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் சற்று நேரத்திற்கு முன்பாக நிறைவேற்றப்பட்டது. 

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று புதிய சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் ஒருவரின் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதை தடுப்பதற்கு ஆதார் எண்ணை இணைப்பது சரியான வகையில் இருக்கும். ஆதார் எண்ணை தர இயலாதவர்கள் வாக்காளர்கள் சேர்த்துக் கொள்ள மறுப்பில்லை என்றும், அதற்கு பதில் வேறு ஏதாவது அடையாள அட்டையை ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த சட்ட மசோதாவில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதன் மூலம் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை மசோதா வழங்குவதாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் குரல் வாக்கெடுப்பின் மூலமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நேற்று மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |