தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது .
கட்டாய தமிழ் மொழி தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 1 முதல் குரூப்-4 வரையிலான கட்டாய தமிழ் மொழி தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தரத்தில் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம், மாதிரி வினாத்தாளை தேர்வுக்கு தயாராவோர் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.