தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அந்த வகையில் தொடர் மழையின் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை ஒருநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிகப்பட்டுள்ளது.