சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அனியாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 36 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Categories