பிரபல இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) பற்றிய ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. தல தோனி என்னும் எத்தனை வருடங்களுக்கு ஐபிஎல் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை (MS Dhoni’s cricket career) குறித்து பேசியுள்ளார். தோனி இப்பவும் ழு உடற்தகுதியுடன் இருப்பதால் சென்னை அணிக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தோனி அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என்றால் நானும் விளையாட மாட்டேன் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றால் அடுத்த ஆண்டும் விளையாடும்படி தோனியிடம் நானே வலியுறுத்துவேன் என்று கூறியுள்ளார்.