Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தாமதம் ஏன் ? – ஆணையம் பதில் …!!

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாராகாததால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை முடிவு செய்யவில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் உள்ளாட்சி பதவிகள் 2016ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் ஜனநாயக அடிப்படையில் இல்லாமல் , அரசுடன் இணைந்து தேர்தல் நடத்தாமல் இருந்தன.  கடந்த டிசம்பர் 9ம் தேதி மாவட்ட பஞ்சாயத்துக்கு தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதில் மாநகராட்சி , நகராட்சிக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மாநகராட்சி , நகராட்சிகள் தான். ஆகவே 15 நாட்களுக்கு மாநகராட்சி , நகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி , ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது ,  தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட காலதாமதம் ஆவதால் மாநகராட்சி , நகராட்சி தேர்தல் தேதியை முடிவு செய்ய முடியவில்லை ஆகவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென்று கோரினார். இதையடுத்து 3 வாரகால அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

Categories

Tech |