Categories
மாநில செய்திகள்

BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… காலை 6 முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்யலாம்… தேர்தல் ஆணையம்..!!

கொரோனா பரவல் காரணமாக இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரை பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாலை நிகழ்ச்சிகள், பாதயாத்திரை, சைக்கிள் பேரணி ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்புதல் பெற்று பரப்புரை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரவு 8 மணிக்கு பின் பரப்புரை செய்ய கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்த நிலையில் 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |