தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 2-ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மேலும் சில இடங்களில் இதுபோன்று வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.