சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக எம்எல்ஏ ஆர். பி உதயகுமார் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவருடைய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், நகை கடன், பயிர்கடன்களில் உள்ள முறைகேடுகளை சரி செய்த பிறகு அவை அனைத்தும் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும்.
எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இலவச செல்போன் கொடுப்பதாக அறிவித்தீர்கள். ஆனால் ஏதாவது கொடுத்தீர்களா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.