தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் 5 சவரன் வரைபெற்றுள்ள நகைகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.