தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கி வருகின்றனர். இதையடுத்து ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியினரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
இதையடுத்து விவசாயிகள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.