பிரபல நடிகரும் , இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா காலமானது திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் நடிகரும் , இசையமைப்பாளருமான டி எஸ் ராகவேந்திரா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 75 வயதான அவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தை அறிமுகமானவர். டி எஸ் ராகவேந்திரா சிந்து பைரவி , சின்ன தம்பி , பெரிய தம்பி , அண்ணா நகர் முதல் தெரு , விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகராக வலம் வந்த இவரின் மரண செய்தியால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.