கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் திலீப் குமார் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதை தொடர்ந்து அவரின் நண்பர், இயக்குனர் பாலச்சந்திரன் குமார் அளித்த பேட்டியில் நடிகை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் பரபரப்பானது. நடிகர் திலீப் மற்றும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் மலையாள நடிகர் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்து, அவரது மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.