நடிகர் விஜய் பனையூர் வீட்டுக்கு மேலும் இரண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.
ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில் , கணக்கில் காட்டாத 300 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தொடந்து 18 மணி நேரத்துக்கு மேலாக விஜய் வீட்டில் நடைபெறும் இந்த சோதனையில் விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இதோடு நடிகர் விஜயின் பனையூர் வீட்டுக்கு மேலும் 2 அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.