Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நடிகையுடன் ஓட்டலில் முன்னாள் அதிமுக அமைச்சர் – பரபரப்பு…!!!

முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகையுடன் தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தங்கி இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதால் ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால்தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் நடிகையின் முகத்தில் இருந்த காயத்திற்கு சிகிச்சை அளித்ததாகவும் மருத்துவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |