Categories
சினிமா தமிழ் சினிமா

#BREAKING : நடிகை பவுலின் தீபா தற்கொலை…. காதலனுக்கு சம்மன்..!!

இரண்டு நாட்களுக்கு முன்பாக பவுலின் தீபா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவருடைய காதலன் சிராஜுதீனுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

‘வாய்தா’ திரைப்பட கதாநாயகி பவுலின் தீபா கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கக்கூடிய மல்லிகை அவன்யூ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இந்த  விவகாரமானது திரைப்படத்துறையில் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் வசித்து வந்த மல்லிகை அவன்யூ அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக முதல் நாள் ஆட்டோவில் வெளியே சென்று வந்தவர் வீட்டுக்கு படிக்கட்டு வழியாக மிகவும் சோகத்தில் ஏறி சென்ற சிசிடிவி காட்சியானது நேற்று வெளியானது.

இதற்கிடையே கோயம்பேடு போலீசார் இவரது பிரேதம் குறித்து முழு விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அடுத்த கட்ட விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் பவுலின் தீபா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரது பிரேதமானது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அடுத்த கட்ட விசாரணையை  கோயம்பேடு போலீசார் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவரது காதலின் சிராஜுதீன் என்பவருக்கு கோயம்பேடு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது காதலான சிராஜுதீன் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருவதாகவும் அவர் வீட்டுக்கு சென்ற போலீசார் சம்மன் கொடுத்து விட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில், சிராஜுதீன் காரைக்குடி பகுதியில் படப்பிடிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னை திரும்பியதும் முழு விசாரணைக்கு ஒத்துழைக்கும் படியாக  கோயம்பேடு போலீசார் சம்மன் அனுப்பி வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பவுலின் தீபா பயன்படுத்தி வந்த செல்போன் தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் யார் யாரிடம் எல்லாம் அதிகமாக பேசி உள்ளார். வீடியோ காட்சிகள் ஏதும் இருக்கிறதா? என்றும் முழுமையாக சோதனை நடந்து வருகிறது.

Categories

Tech |