Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நதிகள் இணைப்பு – முதல்வர் ஆலோசனை …..!!

நதிகள் இணைப்பு தொடர்பாக தற்போது தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. நதிகள் இணைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜேந்திர சிங் ஷெகாவத்துடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். காவிரி ஆறு, கோதாவரி ஆறு இணைப்பு தொடர்பாக காணொலிக் காட்சி மூலமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகின்றது.

குண்டாறு இணைப்புத் திட்டம், கருமேனி நதிநீர் இணைப்பு திட்டம் மற்றும் காவிரி ஆற்றை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இவை தவிர தமிழகத்தின் நீர் மேலாண்மை தொடர்பாகவும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட இருக்கக்கூடிய பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

Categories

Tech |