நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பக்கமே பெரும்பாலான நிர்வாகிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.. அதேசமயம் ஓ பன்னீர் செல்வம் தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளனர் என்று கூறி வருகிறார். இரு தரப்பும் மாறி மாறி
பதிலடி கொடுத்து வருகின்றனர்.. இதற்கிடையே வரும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும், நமது அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகுராஜ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழின் ஆசிரியராக மருது அழகுராஜ் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “நதிகாக்கும் இரு கரைகள்” என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். pic.twitter.com/Moy7mCVSg0
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) June 29, 2022