75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது.
அப்போது பேசிய அவர், எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நம்மை நாமே ஆளவேண்டும் என்பதற்காக தான் மகாத்மா காந்தி போராடினார் என்று பேசியுள்ளார்.