Categories
மாநில செய்திகள்

#BREAKING : நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை திரும்பப் பெற்ற தமிழக அரசு!!

நாகையில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க திட்ட அறிக்கை கோரிய ஒப்பந்தப் புள்ளியை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாகையில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க திட்ட அறிக்கை கோரிய ஒப்பந்தப் புள்ளி அக்டோபர் 22ஆம் தேதி நாளேடுகளில் விளம்பரம் வெளியானது.. தமிழக அரசின் பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி உழவர்கள் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.. அதாவது, நாகையில் நாளை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்..

விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது நாகையில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க திட்ட அறிக்கை கோரிய ஒப்பந்தப் புள்ளியை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.. திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு 50 லட்சம் ஒதுக்கீடு இந்த நிலையில் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |