Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் அனுமதி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இரண்டு தடுப்பூசிகளும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இந்தியா முழுவதிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் கோவிஷில்டு, கோவாக்சின் தடுப்பூசி களுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல், உடல் வலி மற்றும் ஒவ்வாமை போன்றவை ஏற்படுவது இயல்புதான் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |