நாடும் முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
- இரவு நேரத்தில் மக்கள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது.
- சுதந்திர தின கொண்டாட்டம் தனிமனித இடைவெளியுடன் நடைபெறவேண்டும்.
- உடற்பயிற்சி, யோகா பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செயல்படலாம்
- மெட்ரோ, திரையரங்கம், மதுக்கூடங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை தொடர்கிறது.
- ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை தொடர்கிறது.
- கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் இருக்கும்.
- நீச்சல் குளங்கள், கலையரங்கம் உள்ளிட்டவை செயல்பட தடை தொடர்கிறது.
- திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்ற்றிற்கான தடை நீடிக்கிறது.
மத்திய அரசு மூன்றாம் கட்ட தளர்வுகளை அறிவித்த நிலையில் தமிழக அரசு நாளை முடிவெடுக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுஈன்றது.