Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் இன்று முதல்….. காலையிலேயே மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை 8 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் 9வது தவணை ஆகஸ்ட் 9 ஆம் தேதி  செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணைத் தொகையாக ரூ.19,500 கோடியை 9.75 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். பிரதமர் கிசான் திட்டத்தில் 9-வது தவணைத் தொகையாக ரூ.19,500 கோடியை மதியம் 12.30-க்கு விடுவிக்கிறார். 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என விவசாயிகள் வங்கிக்கணக்கில் இதுவரை ரூ.1.38 கோடி செலுத்தப்பட்டது.

Categories

Tech |