Categories
தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் ஏடிஎம் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது….!!!!

வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக பெரும்பாலனவர்கள் ஏடிஎம் மையங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக எந்த ஏடிஎம் மையங்களில் வேண்டுமானாலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் மாதத்திற்கு இவ்வளவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் கார்டு பயன்படுத்தினால் ரூ.20 இருந்து ரூ.21 ஆக கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்-ல் 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.

Categories

Tech |