நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என இயக்குனர் ரஞ்சித் குலேரியா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். சரியான கண்காணிப்புடன் பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளி வகுப்புகளில் மாணவர்கள் நேரடி கல்வி கற்பது என்பது ஒரு மாணவரின் தனிப்பட்ட குணத்தையும் பழக்க வழக்கத்தையும் அது தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.