நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலக அளவில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தடுப்பூசி போடுவதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு ஒரு டோஸ் மருந்துக்கு 250 ரூபாய் வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டணத்தில் சேவை கட்டணமும் அடங்கும் என கூறியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் போடப்படும் தடுப்பூசிகளுக்கு கட்டணம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.