Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவது இன்று முதல் ஒரு மாதம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வு மே 2 முதல் 17 வரை நடைபெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கான UGC-NET தகுதி தேர்வு மே 2 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி மே மாதம் 2,3,4,5,6,7,10,11,12,14,17 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் https:/ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் மார்ச் 3ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |