Categories
மாநில செய்திகள்

BREAKING : நாட்டிலேயே முதல்முறையாக… தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா..!!

நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா 100 ஏக்கரில் உருவாக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்..

தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, காஞ்சிபுரம் அருகே ஓரகடம் சிப்காட்டில் 150 ஏக்கரில் மருத்துவ உபகரண தொழில் பூங்கா அமைக்கப்படும். ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் தோல்பொருள் தொழில் பூங்கா 250 ஏக்கரில் அமைக்கப்படும். நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா 100 ஏக்கரில் உருவாக்கப்படும் என்றார்..

Categories

Tech |