நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருபவர். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். இதனால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 2022 உத்திரபிரதேச மாநில தேர்தலில் பாஜகவுக்கு பிரசாரம் செய்வீர்களா? என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவளல்ல. அதே நேரத்தில் தேசியவாதிகளுக்கு பிரச்சாரம் செய்வேன் என்று கூறியுள்ளார்.