ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்தே கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பக்தர்களுடைய வருகையும் குறைந்தது.
தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் உள்ளூர் பக்தகர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் தரிசனத்திற்காக ரூபாய் 300 டிக்கெட் நாளை மறுநாள் முதல் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவதாகவும், நாளுக்கு எட்டாயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.